தபால் வாக்குப் பதிவு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தபால் வாக்குப் பதிவு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தபால் வாக்குகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாமக்கலில் தபால் வாக்கு பதிவு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இன்று தபால் வாக்கு பதிவு நடைபெற்று வருவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மக்களவை பொது தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவு பணியின்போது, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், காவல் துறையினர், ஊர் காவல் படையினர், முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன்படி, இன்றையதினம் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 492 காவலர்கள் மற்றும் 103 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், 124 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 719 நபர்கள் தபால் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர் இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .ச. ராஜேஸ் கண்ணன் தனது வாக்கினை செலுத்தினார் பின்னர் மற்ற காவலர்களும் அவர்களது வாக்கினை செலுத்தினார்கள்

Tags

Next Story