பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பல்வேறு திட்டப்பணிகள் குறித்து  மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

நாமக்கல் கபிலர் மலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் உமா ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், இருக்கூர், பெரப்பன்சோலை கபிலக்குறிச்சி மற்றும் பெரியசோளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், இருக்கூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.48.46 இலட்சம் மதிப்பீட்டில் 3.150 கி.மீ தொலைவிற்கு சாலை மேம்படுத்தப்பட்டுள்ளதையும், இருக்கூர் முதல் பாண்டமங்கலம் வரை ரூ.35.61 இலட்சம் மதிப்பீட்டில் 2.140 கி.மீ தொலைவிற்கு சாலை மேம்படுத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேற்கண்ட சாலை பணிகள் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும்.

தொடர்ந்து, பெரப்பன்சோலை ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், ரூ.4.22 இலட்சம் மதிப்பீட்டில் 4,200 எண்ணிக்கையில் நிழல் தரும் வகையில் வேப்பமரம், ஆலமரம், புளியமரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும், ரூ.2.20 இலட்சம் மதிப்பீட்டில் கபிலர்மலை நல்லூர் சாலையில் கருக்கம்பாளையம் பிரிவு சாலை வரை 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருதையும், மரக்கன்றுகளுக்கு போதிய இடைவெளியில் நீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வருவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பெரியசோளிபாளையம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ் மண்புழு உரக் கொட்டகை அமைக்கப்பட்டு மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருவதையும், அகலக்குழிகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் வருகை தரும் குழந்தைகள் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து பெரியசோளிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story