வெளிமாநிலத்தவருக்கு புதிய குடும்ப அட்டை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மாவட்ட ஆட்சியர் தங்கவேல்
கரூர் மாவட்டத்தில், வெளிமாநிலங்களில் இருந்து, நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு “e-Shram” எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், மனுதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேரடியாக அளிக்க வேண்டும் எனவும்,அதன் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மேற்கண்ட மனுக்களின்மீது உரிய விசாரணை செய்து, நிரந்தரமாக தமிழ்நாட்டில் தங்கி உள்ளவர்களுக்கு புதிய மின்ணனு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் தற்காலிகமாவோ அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்து அவர்களது சொந்த மாநிலத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்களும் “e-Shram” மூலம் விண்ணப்பித்து, உரிய படிவத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம். மேற்கண்ட மனுவினை சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களின் மூலம் மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்து புதிய குடும்ப அட்டை பெற்றவுடன் தமிழ்நாட்டில் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தின் மூலம் அவர்கள் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.