துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மாவட்ட ஆட்சியர்
தேர்தல் நடத்தை விதிகள் அமல், உரிமம் பெற்ற துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது, நாடாளுமன்ற தேர்தல்-2024 அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனால் துப்பாக்கி உரிமம் பெற்ற வர்கள் துப்பாக்கிகளை வைத்திருக்க தடையாணை பிறப்பிக் கப்பட்டுள்ளது. எனவே தர்மபுரிமாவட்டத்தில் உரிமம்பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அவற்றை தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்ப டைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைப்பவர்கள் அதற்குரிய ஒப்புகை சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின் ஒரு வாரம் கழித்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த பின்னர் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை தங்கள் பொறுப்பில் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story