சிவகாசியில் பள்ளி ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

சிவகாசியில் பள்ளி ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
சிவகாசியில் நடைப்பெற்ற பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்...
சிவகாசியில் நடைப்பெற்ற பள்ளி ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்

சிவகாசி ஆர்.எஸ்.ஆர். பள்ளி ஆண்டு விழாவிருதுநகர் மாவட்ட கலெக்டா் ஜெயசீலன் பங்கேற்பு.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி- வெம்பக்கோட்டை மெயின் ரோட்டில் ஆர்.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியின் 3வது ஆண்டு விழா பள்ளியின் தலைவர் ஆர்.சண்முகையா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்சிக்கு பள்ளியின் தாளாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளியின் இயக்குனர் தனலட்சுமி அம்மாள்,பள்ளி நிர்வாக உறுப்பினர் பிரியாமகேந்திரன் முன்னிலை வகித்தனர்.பள்ளியின் முதல்வர் முத்துலட்சுமி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன்,விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் [தனியார் பள்ளிகள்] கே.ஜான்பாக்கியாசெல்வம் கலந்து கொண்டு பேசினர். நிகழ்சியில் கலெக்டர் ஜெயசீலன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் ஊக்க தொகை வழங்கி பேசியதாவது, இந்த விழாவில் நானும் ஒரு தகப்பனாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. தற்போது உள்ள சூழ்நிலையில் குழந்தைகளை வளர்ப்பதே ஒரு பெரிய வேலை. கடந்த தலைமுறையினர் பள்ளி படிப்பை எளிதாக எடுத்துக்கொண்டனர். பள்ளிக்கு சென்றால் தான் குழந்தைகளின் அறிவுபசி தீரும் என்ற நிலை இருந்தது.ஆனால் தற்போது அப்படி இல்லை. கம்ப்யூட்டர் உதவியுடன் குழந்தைகள் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள்.தற்போது உலக அளவில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் அதிகரித்துள்ளது. எங்கு இருந்து வேண்டுமானாலும் தேவையான தகவல்களையும், பயிற்சிகளையும் பெறும் வசதி தற்போது அதிகரித்துள்ளது.செல் போனில் விளையாடும் குழந்தையை அந்த பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேறு சில விளையாட்டுகளையும், செயல்களையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்றார்.விழாவில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Tags

Next Story