ஏர்வாடியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய வட்டாட்சியர்

ஏர்வாடியில்  ஆக்கிரமிப்புகளை அகற்றிய வட்டாட்சியர்
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஆக்கிரமிப்புகளை வட்டாட்சியர் அகற்றினார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட தர்கா பகுதியில் சர்வே எண் 502 , 504 இல் எந்த ஒரு கடைகளும் அமைக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை மீறி சிலர் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து யாத்திரைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வருவதாக வந்த புகாரியின் அடிப்படையில்,

கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் அப்பகுதியை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யாதவாறு கற்கள் அமைத்து சுற்றி கம்பிகள் வைத்து யாத்திரைகள் பொதுமக்கள் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஏர்வாடி தர்காவில் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு,

எனும் மத நல்லிணக்க விழா ஜூன் 31-ம் தேதி மாலை தொடங்கி ஜூன் 1-ம் தேதி அதிகாலை நடக்க இருப்பதால் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் உள்ளூர்களிலிருந்தும் அதிகப்படியான யாத்திரைகள் கலந்து கொள்ள வருகை புரிவதால் இப்பகுதியை யாத்திரிகள் பயன்பெறும் வகையில் அமைத்துக் கொடுத்த கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமாருக்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதில் கீழக்கரை துணை வட்டாட்சியர் பரமசிவம் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் மாயா குளம் கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள்மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story