இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.....
ஆட்சியர் ஆய்வு
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர்,அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் அவர்கள் இன்று விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர அறையினை நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்,இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள மின்னணு இயந்திரங்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும். வருகை பதிவேடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மேலும் விளவங்கோடு சட்டமன்றத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள பொருட்களான வாக்காளர் பெயர் பட்டியல், முகவர்களின் கையேடு, ஸ்டிக்கர், உள்ளிட்டவை போதுமானதாக உள்ளனாவா என்பதையும் அலவலர்களிடம் கேட்டறியப்பட்டது.அதனைத்தொடர்ந்து தேர்தலில் பணிபுரியும் காவலர்கள், வாக்குசாவடி அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு செய்வதற்கான பணிகள் குறித்து கேட்டறியப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் அவர்கள் தெரிவித்தார்கள்.
Next Story