பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டத்திற்கு உட்பட்ட கபிலர்மலை மற்றும் பரமத்தி ஊராட்சி ஒன்றியம் ஆய்வு மேற்கொண்டார். இதில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேளூர் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலக கட்டடத்தையும், சாணார்பாளையம் நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டு பொது விநியோகப்பொருட்களின் இருப்பு, பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை,
மீதமுள்ள பொருட்களின் இருப்பு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, சேளூர் ஊராட்சி, சாணார்பாளையத்தில் தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டியினை பார்வையிட்டு தொட்டியின் கொள்ளளவு,
பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு, பயன்பெறும் பொதுமக்களின் எண்ணிக்கை, நீர்த்தேக்கத்தொட்டி சுத்திகரிக்கப்பட்ட நாள் உள்ளிட்டவை குறித்தும், சேளூர் ஊராட்சி, பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள நீருந்து நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பரமத்தி ஊராட்சி ஒன்றியம், கூடச்சேரி ஊராட்சி, பூசாரிப்பட்டிபுதூரில் மகளிர் குழு கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும், பூசாரிப்பட்டிபுதூரில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ரூ.35,000 மதிப்பீட்டில் சமுதாய உறிஞ்சி குழி அமைக்கப்பட்டுள்ளதையும்,
இராமதேவம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் நியாய விலை கடை மற்றும் பெருங்குறிச்சியில் கட்டப்பட்டு வரும் மகளிர் குழு கட்டடத்தினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.