வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்

கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வு செய்தார்

வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். நாடே எதிர்பார்த்துள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ள நிலையில், கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் கரூர் அடுத்த தளவாய் பாளையத்தில் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் மூன்றடுக்கு பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ள நிலையில், அதற்கான பணிகள் தயாராக உள்ளதா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான தங்கவேல் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க துணை ராணுவ படையினருக்கு போதிய ஆலோசனைகளையும், காவல்துறையினருக்கும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கை குறித்து பணியில் உள்ள அதிகாரிகளுக்கும் போதிய ஆலோசனைகளை வழங்கி பணிகளை துரிதப்படுத்தினார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

Tags

Next Story