உயர்மட்ட பாலப் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

உயர்மட்ட பாலப் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2.30 கோடி திட்ட மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட பாலப் பணிகளையும் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டு - ஆலம்பட்டறை இடையே நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2.30 கோடி திட்ட மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட பாலப் பணிகளையும் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டு - ஆலம்பட்டறை இடையே நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2.30 கோடி திட்ட மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட பாலப் பணிகளையும் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து மேலாலத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நத்தம்மேடு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மனிதநேய குழந்தைகள் பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 33 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து குடியாத்தம் வட்டம் அகரம்சேரி ஊராட்சியில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணை மற்றும் பூங்காவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள மூலிகை தோட்டம், நிழல் வகை குடில் மற்றும் பழ செடிகளின் தாய் வகை செடிகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது குடியாத்தம் வட்டாட்சியர் சித்ராதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், கல்பனா உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story