கோவையில் செல்பி பாய்ண்ட்டுகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

கோவையில் செல்பி பாய்ண்ட்டுகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

செல்ஃபி பாயிண்ட் புகைப்படம் எடுத்துகொள்ள மக்கள்

கோவையில் செல்பி பாய்ண்ட்டுகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசு சார்பில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் 100% வாக்குப்பதிவு நடந்திட அரசு சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் செல்பி பாய்ண்ட்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார்.

முன்னதாக வாக்காளர் உறுதிமொழி, கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் பொதுமக்கள் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு செல்பி பாயிண்ட்டுகளில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்

மேலும் கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த செல்பி பாய்ண்ட் மற்றும் கையெழுத்து இயக்க பேனர்கள் வைக்கப்பட உள்ளது.இந்த செல்பி பாயிண்ட்டில் "தேர்தல் பருவம்- தேசத்தின் பெருமிதம்" "நமது இலக்கு 100% வாக்குப்பதிவு" "என் ஓட்டு என் உரிமை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story