பட்டா கிடைக்காமல் அவதி: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பட்டா கிடைக்காமல் அவதி: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் 

நாகலாபுரம் சமத்துவபுரத்தில் வசிக்கும் பொதுமக்கள் 24 ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் அவதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா நாகலாபுரம் கிராமத்தில் கடந்த 2000 ஆண்டு சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு வசித்து வரும் பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்கு உரிய தீர்வை மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை கட்டி வருகின்றனர் ஆனால் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பட்டா கேட்டு தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்தால் அரசு அதிகாரிகள் பட்டா வழங்க மறுத்து வருகின்றனர் மேலும் அரசு ஆவணத்தில் நாகலாபுரம் சமத்துவ புரம் புன்செய் நிலம் என உள்ளது எனவே வீடுகள் இருக்கும் பகுதியை புன்செய் நிலம் என அரசு ஆவணத்தில் இருப்பதை மாற்றி தங்களுக்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க வேண்டும்

என கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சமத்துவபுரத்தை சேர்ந்த கிராம மக்கள் முற்றுகையிட்டனர் பட்டா வழங்கப்படாததால் வயது முதிர்ந்த பயனாளிகள் இறந்த பின்பு அவரது வாரிசுதாரர்களுக்கு பெயர் மாற்றம் செய்ய முடியாமல் தாங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த 24 ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாமல் உள்ளது.

எனவே பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

Tags

Next Story