சிறுதானிய உணவுத் திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் பார்வை

சிறுதானிய உணவுத் திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் திறந்து வைத்து பார்வையிட்டார்........ பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் திறந்து வைத்து பார்வையிட்டார்.

2023 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது, சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களாகிய நுகர்வோர்களிடையே, பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு, இன்று சர்வதேச சிறுதானிய திருவிழா நடைபெற்றது.

இந்த உணவு திருவிழாவில் துறை சார்ந்த அலுவலர்கள், 34 சுய உதவிக்குழுக்கள், பெரம்பலூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், தனலெட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து, சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து கண்காட்சி அரங்குகள் அமைத்திருந்தனர் மேலும், அனைத்து வகையான பாரம்பரிய சிறுதானியங்களின் சிறப்புகள் தொடர்பான விழிப்புணர்வு தகவல்கள் வழங்கி, பல்வகையான சிறுதானிய உணவுகள் தயார் செய்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து, சிறுதானிய உணவு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், சிறுதானிய உணவு தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபால கங்காதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story