மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் குறித்த மாவட்ட குழு கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் குறித்த மாவட்ட குழு கூட்டம்
X

மாவட்ட குழு கூட்டம் 

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் தொடர்பாக அனைத்து முதல்நிலை அலுவலர்களுடனான மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் தொடர்பாக அனைத்து முதல்நிலை அலுவலர்களுடனான மாவட்ட அளவிலான குழு கூட்டம் மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையரக துணை இயக்குநர் சரளா தலைமையில் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மாநில ஆணையரகத்தில் இருந்து திட்டமேலாளர்கள் தேவகுமார், சங்கர் சகாயராஜ், ராஜராஜன் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் திட்டம் தொடர்பாக அனைத்து முதல்நிலை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் நல சங்க உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தாரிடம் எடுத்துரைத்தனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயனடையும் வகையில், அரசின் திட்டங்கள் சரியான முறையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், அனைத்து அரசு கட்டிடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று அணுகும் வகையிலும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. உரிமைகள் திட்டம் குறித்து முழுமையாக விளக்கப்பட்டபின் கலந்துரையாடல் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் தங்கள் குறைகளை விளக்கி கூறினார்கள். அதற்கான விளக்கம் மற்றும் தீர்வுகளை மாவட்ட அலுவலர்களும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும் எடுத்துரைத்தார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல பொம்மி உள்ளிட்ட அனைத்து முதல்நிலை அலுவலர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தாரும், மாற்றுத்திறனாளிகள் நல சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story