விருதுநகரில் தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்த மாவட்ட கவுன்சிலர்கள்

விருதுநகரில் தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்த மாவட்ட கவுன்சிலர்கள்
மாவட்ட கவுன்சிலர்கள்
விருதுநகரில் தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்த மாவட்ட கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் சேர்மன் வசந்தி மான்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அதிமுக கவுன்சிலர் மச்சராஜா கள்ளக்குறிச்சி விஷசாராயம் குடித்து இருந்தவர்கள் என்பதற்கு பதிலாக விக்கிரவாண்டி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்துமாறு கூறினார்.

உடனே திமுக கவுன்சிலர்கள் கள்ளச்சாராயம் சம்பவம் நிகழ்ந்தது கள்ளக்குறிச்சி என்றும் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது என பதிலளித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு சிறிது நேரம் சிரிப்பாலை ஏற்பட்டது.

அதன் பின்னர் தொடங்கிய கூட்டத்தில் 18-வது நிதி குழு மூலமாக ரூபாய் 8 கோடி வளர்ச்சி நிதியாக வந்துள்ளது. நடந்து முடிந்த வளர்ச்சி பணிக்காக ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கவுன்சிலர்கள் சேர்மன் வசந்தி மான் ராஜிடம் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர் முதலில் தீர்மான நோட்டில் கையெழுத்திட்ட பின்பு நிதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வசந்தி மான்ராஜ் கூறினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் தீர்மானம் நோட்டில் கையெழுத்திட மறுத்தனர் இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது இதை அடுத்து தீர்மான நோட்டுடன் மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி மான்ராஜ் காரில் ஏறி புறப்பட முயற்சித்தார் அவரை வழிமறைத்த மாவட்ட கவுன்சிலர்கள் நோட்டை அங்கிருந்து கொண்டு செல்லக்கூடாது என அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதிமுக மற்றும் திமுக மாவட்ட கவுன்சிலர்கள் இணைந்து சேர்மனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் வெளியே செல்ல முடியாதபடி அலுவலக கதவை பூட்டி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி பவித்ரா சேர்மன் வசந்தி மான்ராஜ் மற்றும் கவுன்சிலர்கள் மற்றும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தற்போது சேர்மன் வசந்தி மான்ராஜ் விருதுநகர் ஆட்சியரை சந்திக்க சென்றார் இதனால் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story