மாவட்ட வளர்ச்சி குழுக் கூட்டம் : கனிமொழி எம்பி பங்கேற்பு!

மாவட்ட வளர்ச்சி குழுக் கூட்டம் : கனிமொழி எம்பி பங்கேற்பு!
X

மாவட்ட வளர்ச்சி குழுக் கூட்டம்


தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி தலைமையில், சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் , மீன்வளம் - மீனவர்; நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்ததாவது: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், பிராம மந்திரி கிராம முன்னோடி திட்டம், ஜல் ஜீவன் மிஷன், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், தீன்தயாள் அந்தியோதயா யோஜனா, தீன்தயாள் உபத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ராஷ்டீரிய கிருஷி விகாஸ் யோஜனா, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மண் வள அட்டை திட்டம், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்,

பிரதம மந்திரி கிருஷி சின்சாயி யோஜனா, ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலகு, குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய சமூக பாதுகாப்பு திட்டம், சத்துணவுத்திட்டம்,

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் உணவுப்பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், பிரதம மந்திரியின் இலவச எரிவாயு இணைப்பு திட்டம், தேசிய உணவுப்பாதுகாப்புச்சட்டம், பிரதம மந்திரி கனிம வள அறக்கட்டளை, தேசிய சுகாதாரத் திட்டம், ஜனனி சிசு சுரக்ஷித்; திட்டம், தேசிய குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் (நகர்புறம்) அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், சர்வ சிக்ஷ அபியான், தேசிய ஊரக குடிநீர் திட்டம்,

ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம், தீனதயாள் உபாத்தியாய கிராம மின் வளர்ச்சி திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதில் ஏழை, எளிய மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இத்திட்டத்தில் செயல்படுத்த வேண்டிய மீதமுள்ள இலக்கினை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பாரத பிரதமர் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊரக குடியிருப்புகளுக்கு இணைப்புச்சாலை வசதி ஏற்படுத்திக்கொடுப்பதுடன் ஊரக சாலைகளை நெடுஞ்சாலைகளுடன் இணைத்திடவும் வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், தொழிற்சாலைகள்,

கல்லூரிகள் ஆகிய அத்தியாவசிய இடங்களுக்கு அருகாமையில் வசிக்கும் கிராம மக்களுக்கு பேருதவியாக இருக்கும். எனவே, இத்திட்டத்தில் முழுகவனம் செலுத்தி விரைந்து பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தூய்மை பாரத இயக்கத்தின்கீழ் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற ஊராட்சி என்ற நிலையில் அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கு தனிநபர் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் தனிநபர் கழிப்பறைகள் அமைந்த ஊராட்சியாகவும், சுகாதார ஊராட்சியாகவும் மாற்றிட ஊராட்சி மன்ற தலைவர்கள் பணியாற்றிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story