மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டம்

X
மாவட்ட வளர்ச்சி கூட்டம்
மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை:- திருவண்ணாமலை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டம் (DISHA) உறுப்பினர் செயலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் முன்னிலையில் தலைவர் / திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்குழுக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சமூக நலத்துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் இதர துறைகளில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), ஜல் ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தேசிய சுகாதார இயக்கம், தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டம், தேசிய நுண்ணீர் பாசனத் திட்டம், தேசிய வேளாண்மை சந்தை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், மதிய உணவு திட்டம், ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும், பொது சேவை மையங்களின் பயன்பாடு குறித்தும், மேற்குறித்த திட்டங்கள் குறித்தும், மாவட்ட முன்னோடி வங்கி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்ட மின்சாரக் குழு கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தலைவர் / திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் 4வது சி.என்.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் மின்சார துறை சார்பில் செய்யப்படவுள்ள மேம்பாட்டு பணிகள் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. ஒன்றிய அரசின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை (புதுப்பிக்கப்பட்ட மின் விநியோக திட்டம்) இந்த திட்டத்திற்காக முழுமையாக பயன்படுத்திக் கொள்ள குழுதலைவர் அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் இணைத்தலைவர் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.எம்.கே.விஷ்ணுபிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.சரவணன் (கலசப்பாக்கம்), ஒ.ஜோதி (செய்யார்), கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், மாவட்ட அலுவலர் அருண்லால், வன மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் பார்வதி சீனுவாசன், மகளிர் திட்ட இயக்குநர் பா.அ.ஸையித் சுலைமான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாள பெ.இராமகிருஷ்ணன், அனைத்து மின் செயற்பொறியாளர்கள், அனைத்து நகராட்சி தலைவர்கள், அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், அனைத்து பேரூராட்சி தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story
