வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்குகள் பதிவு செய்யும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு..
தேர்தல் அலுவலர் ஆய்வு
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்குகள் பதிவு செய்யும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மீனாட்சி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பில் ஏற்படுத்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்குகள் பதிவு செய்யும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையருமான ராதாகிருஷ்ணன், இன்று (13.04.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பன்னீர் செல்வம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story