ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்

ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்

ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்

கிராமப்புற ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளோடு இணைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் கூறினார்.
திண்டுக்கல் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.இதற்கு மாவட்ட தலைவர் பாண்டியராஜ் தலைமை தாங்கினார்.செயலாளர் கர்ணன்,பொருளாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலதண்டாயுதபாணி வரவேற்புரையாற்றினார். இதில் மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தீர்மானங்கள்கூட்டத்தில் கிராம ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும்.கிராம ஊராட்சி செயலர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணி மாறுதல் வழங்க வேண்டும்.தமிழகம் முழுமைக்கும் ஊராட்சிகளையும்,ஊராட்சி ஒன்றியங்களையும் பிரிக்க வேண்டும். கருணை அடிப்படை பணி நியமன இட ஒதுக்கீட்டு முறை ரத்து செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story