மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம்

செங்கல்பட்டில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. உடன் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, சார் ஆட்சியர் நாராயண சர்மா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) .அனாமிகா ரமேஷ், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழுத்தலைவர் உதயா கருணாகரன்,செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம் கே டி கார்த்திக் தண்டபாணி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.பரணிதரன் மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story