மல்லசமுத்திரத்தில் வட்டார சுகாதார பேரவை கூட்டம்

X
வட்டார சுகாதார பேரவை கூட்டம்
மல்லசமுத்திரத்தில் வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட, நந்தவனபாவடி திருமணமண்டபத்தில் நேற்று நடந்த வட்டார சுகாதார பேரவை கூட்டத்திற்கு, டவுன் பஞ். தலைவர் திருமலை தலைமை வகித்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் ஜெகதீஷ் முன்னிலை வகித்தார்.
இதில், வட்டரத்திற்குட்பட்ட அரசுஆரம்ப சுகாதார நிலையங்கள், துணைசுகாதார நிலையங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயன்பாட்டு உபகரணங்கள் ஏற்படுத்தி தருவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மாவட்ட காசநோய் நலக்கல்வியாளர் ராமச்சந்திரன், செயல்அலுவலர் ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்., தலைவர்கள், மருத்துவ அலுவலர்கள், களப்பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
