சேலம் மாவட்ட கராத்தே சங்க ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்ட கராத்தே சங்க ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

சேலம் மாவட்ட கராத்தே சங்க ஆலோசனை கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்ட கராத்தே சங்க ஆலோசனை கூட்டம் அழகாபுரத்தில் நடந்தது. கராத்தே சங்க மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சரவணன், கராத்தே மாணவர்களின் வளர்ச்சி, சங்க முன்னேற்றம், உறுப்பினர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். தொழில்நுட்ப இயக்குனர் மாதேவஸ்வரன் வாழ்த்தி பேசினார்.

கூட்டத்தில் துணைத்தலைவர்கள் அன்பழகன், செல்வம், இணை செயலாளர்கள் ஸ்டாலின், சக்திவேல், செயற்குழு உறுப்பினர்கள் ஹரிகரன், கனகசிவம், அருண்குமார், ரகுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேசிய போட்டியாளர்கள் யஸ்வந்த், கிஷோர், ஸ்ரீதர் ஆகியோருக்கு சேலம் மாவட்ட கராத்தே சங்க உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags

Next Story