மாவட்ட 'கிக் பாக்ஸிங்' போட்டி வரும் 15ல் காஞ்சியில் துவக்கம்

மாவட்ட கிக் பாக்ஸிங் போட்டி வரும் 15ல் காஞ்சியில் துவக்கம்

 கிக் பாக்சிங் 

அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில் மாவட்ட கிக் பாக்சிங் போட்டி, வரும் 15ல் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், மாவட்ட கிக் பாக்சிங் போட்டி, வரும் 15ல் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. 'பாயின்ட் பைட், கிக் லைட், லைட் காண்டாக்ட், புல் காண்டாக்ட், கிக்லயிட் மற்றும் பார்ம்ஸ்' உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. இதில், 7 - 9 வயது சிறுவர்கள்; 10 - 15 வயது சப் - ஜீனியர் பிரிவு; ஜூனியர், சீனியர் என, நான்கு பிரிவுகளில், போட்டிகள் நடக்கின்றன. 100க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரர் - வீராங்கனையர், மே மாதம் 3 - 5 வரை சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிக்கு பங்கேற்க தகுதி பெறுவர் என காஞ்சிபுரம் கிக் பாக்ஸிங் போட்டி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

Tags

Next Story