மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி

மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி
மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் புனித ஜோசப் பள்ளி ஒருங்கிணைப்பில், பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி நேற்று துவங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த கோவளம் புனித ஜோசப் பள்ளி ஒருங்கிணைப்பில், பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி, நேற்று துவங்கியது. இப்போட்டி, இரண்டு நாட்கள் நடக்கிறது. இப்போட்டியை, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் துவக்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் இருந்து, 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட இருபாலரும், 75 பேர் பங்கேற்றனர். மாவட்ட அளவில் முதலிடம் பிடிப்போர், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.

Tags

Next Story