சேலத்தில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி

X
குத்து சண்டை
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முதல் 2 நாட்கள் தேக்வாண்டோ போட்டிகள் நடந்தன. இதில் 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான குத்துச்சண்டை போட்டி நேற்று நடந்தது. போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் லாரன்ஸ் தொடங்கி வைத்தார்.மொத்தம் 11 பிரிவுகளில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் அரசு, நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 64 மாணவர்கள், 40 மாணவிகள் என மொத்தம் 104 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் முதல் 3 இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் அடுத்த மாதம் (ஜனவரி) நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
Tags
Next Story
