மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள்
மாவட்ட அளவிலான மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியருக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி போட்டியை துவக்கி வைத்தார். இதில், 14, 17, 19 வயது என, மூன்று பிரிவுகளில், தனித்தனியாக அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியருக்கு, 7 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 150 மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு இடைநிலை கல்வி மாவட்ட அலுவலர்செந்தில்குமார், தொடக்க கல்வி மாவட்ட அலுவலர் நளினி ஆகியோர் பரிசு மற்றும் பதக்கம் வழங்கினர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவ -மாணவியர், அடுத்த மாதம் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் தெரிவித்தார்.