மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் துவக்கம்

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் துவக்கம்

ஜிகே மணி

தர்மபுரி மாவட்டம், புளிக்கரையில் நான்கு மாவட்டங்கள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டி துவக்கியது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட புலிக்கரை ஊராட்சி புல்லாளப்பட்டியில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களின் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் மட்டைப்பந்து (கிரிக்கெட்) போட்டியினை பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மற்றும் பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story