வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டி
கிரிக்கெட் போட்டி
நாசரேத்-திருமறையூர் மறுரூப ஆலய வளாகத்தில் நாசரேத் வட் டார அளவிலான13-வது ஆண்டு கிரிக்கெட் போட்டி 3 நாட்கள் நடந் தது. போட்டியை திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் ஜெபித்து தொடங்கி வைத்தார் போட்டியில் நாசரேத் , தைலாபுரம், பாட்டக்கரை, பிள்ளையன்மனை, கடையனோடை, பிரகாசபுரம், மாதா வனம், டிகேசி நகர், ஞானராஜ் நகர், அகப்பைகுளம், மணிநகர் உட்பட 16 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் ஞானராஜ் நகர் அணியும் தைலாபுரம் அணியும் மோதின.
இதில் ஞானராஜ் நகர் அணி வெற்றிபெற்று கோப்பையை தட்டிச் சென்றது.பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது.சேகரத் தலைவர் ஜான் சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்தார். பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல் முன்னிலை வகித்தார். பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வ குமார் வெற்றி பெற்ற ஞானராஜ் நகர் அணிக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பணம் ரூ. 5 ஆயிரத்தை வழங்கினார்.
2வது இடத்தை பிடித்த தைலாபுரம் அணிக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பணம் ரூ.3 ஆயிரமும், 3 வது இடத்தை பிடித்த அகப்பைகுளம் அணிக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பணம் ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டன. இதில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜெயபால், தேவதாஸ், சேகர செயலர் ஜான் சேகர், பொருளாளர் அகஸ்டின் செல்வராஜ், அசன கமிட்டி பொருளாளர் ரூபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சபை ஊழியர் ஸ்டான்லி ஜாண்சன் நிறைவு ஜெபம் செய்தார்.