மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி - கன்னியாகுமரி அணி முதலிடம்

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி - கன்னியாகுமரி அணி முதலிடம்
முதலிடம் பிடித்த அணிக்கு பரிசு
கன்னியாகுமரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் கன்னியாகுமரி சீ போ்ட்ஸ் அணி முதல் பரிசு வென்றது.
கன்னியாகுமரி சீ போ்ட்ஸ் கிரிக்கெட் கிளப் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் சீ போ்ட்ஸ் அணி முதலிடம் பெற்றது. அந்த அணிக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கம், சுழற்கோப்பையை கன்னியாகுமரி பேரூராட்சி 1ஆவது வாா்டு உறுப்பினா் சி.எஸ். சுபாஷ் வழங்கினாா். 2ஆம் பரிசு வென்ற புதுக்கிராமம் அணிக்கு ரூ. 20 ஆயிரம், 3ஆம் பரிசு வென்ற நாகா்கோவில் இந்துக் கல்லூரி அணிக்கு ரூ. 15 ஆயிரம், 4ஆம் பரிசு வென்ற கன்னியாகுமரி பி அணிக்கு ரூ. 10 ஆயிரம், சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.

Tags

Read MoreRead Less
Next Story