எலச்சிபாளையம் வட்டாரத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

X
எலச்சிபாளையம் வட்டாரத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
எலச்சிபாளையம் வட்டாரத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
எலச்சிபாளையம் வட்டாரம், வேளாண்மைத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின்கீழ் வட்டார அளவிலான விவசாய ஆலோசனை கூட்டம் நடந்தது. விவசாய ஆலோசனைக்குழு தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அட்மா திட்டம் 2023-–24ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதற்கு ஏற்ப திட்ட இனங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயமாலா அவர்கள் தலைமை வகித்து உறுப்பினர்களுக்கு வேளாண்மைத்துறை சார்ந்த மத்திய மாநில திட்டங்கள், நுண்ணீர் பாசனம், மற்றும் ஒருங்கணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடுபொருட்கள் மற்றும் உயிர் உரங்களின் பயன்களை குறித்து விரிவாக கூறி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். இதில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கார்த்திகா அவர்கள் கலந்துகொண்டு, தோட்டக்கலைத்துறை மானியத் திட்டங்கள் பற்றியும், கால்நடைத்துறை மருத்துவர் பாலாஜி அவர்கள் கலந்துகொண்டு, கால்நடைத்துறை திட்டங்கள் பற்றியும், விற்பனை மற்றும் வணிகம் துறை திட்டங்கள் பற்றி உதவி வேளாண்மை அலுவலர் பாலலிங்கேஸ்வரன் கூறினார். வேளாண்மை பொறியியல்துறை மானியத்திட்டங்கள் பற்றி உதவி பொறியாளர் தீபா அவர்கள் கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் திவாகர் அவர்கள் அட்மா திட்ட செயல்பாடுகள் பற்றி விரிவாக கூறினார். மேலும், உதவி வேளாண்மை அலுவலர்கள் ராஜதுரை மற்றும் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் வாசுகி ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
