நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான பன்முக விளையாட்டுப் போட்டிகள்

நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான பன்முக விளையாட்டுப் போட்டிகள்
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான பன்முக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

நாகர்கோவில் பொன்ஜெஸ்லி கல்லூரி வளாகத்தில் மாவட்ட அளவிலான 9 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான மாணவ, மாணவிகளுக்கு சிலம்பாட்டம், கராத்தே, ஸ்கேட்டிங், டிராயிங், அபாகஸ், ஹேண்ட் ரைட்டிங் பன்முக விளையாட்டுப் போட்டிகள் பொன்ஜெஸ்லி கல்வி குழுமம் மற்றும் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சேர்மன் பொன் ராபர்ட் சிங் தலைமையில் நடைபெற்றது.

போட்டியில் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பொன் ஜஷ்வின் சிங், கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவர் ஆஸ்டின் ஆகியோர் முன்னிலையில் மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா வாழ்த்துரை வழங்கினார்கள்.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் சான்றிதழ்களும், வெற்றிக் கோப்பைகளும் வழங்கினார்கள்.

போட்டிகளை கன்னியாகுமரி மாவட்ட மோனா ரிஷி ஸ்போர்ட்ஸ் அகாடெமி நிறுவனர் டாக்டர் ப.மகேஷ் தலைமையில் நிசி கமொரின் அகாடெமி நிறுவனர் சித்ரா சுபாஷ் மற்றும் பொன் ஜெஸ்லி கல்வி குழுமங்கள் இணைந்து சிறப்பாக நடத்தினார்கள். இந்த போட்டிகளில் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களுடைய பெற்றோர்களோடு கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story