மாவட்ட அளவிலான சமூக ஊடகங்களுக்கான பயிற்சி
திருவண்ணாமலையில் திமுக சார்பில் மாவட்ட அளவிலான சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி திருமதி மஹாலில் திமுக சார்பில் மாவட்ட அளவிலான சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஓ ஜோதி, வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சி வகுப்பில் கழக இளைஞரணி,மாணவரணி தகவல் தொழில்நுட்ப அணி,மகளிர் அணி தொண்டர் அணி,தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி,பொறியாளர் அணி,மருத்துவர் அணி விளையாட்டு மேம்பாட்டு அணி,சிறுபான்மை நல உரிமை பிரிவு,விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, சுற்றுச்சூழல்அணி,அயலக அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள்.துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story