மாவட்ட அளவிலான தொலைநோக்கி வழி வான் நோக்குதல் பயிற்சி

மாவட்ட அளவிலான தொலைநோக்கி வழி வான் நோக்குதல் பயிற்சி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனக்கோரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான தொலைநோக்கி வழி வான் நோக்குதல் பயிற்சி நடைப்பெற்றது.


திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனக்கோரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான தொலைநோக்கி வழி வான் நோக்குதல் பயிற்சி நடைப்பெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனக்கோரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலமாக மாவட்ட அளவிலான தொலைநோக்கி வழி வான் நோக்குதல் பயிற்சி மே 30 மற்றும் மே 31 ஆகிய இருநாட்கள் நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட வட்டார அறிவியல் கருத்தாளர்களுடன் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் ,இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள். மற்றும் பொதுமக்கள் இரவு வானத்திலுள்ள நட்சத்திரங்கள் கோள்கள் நிலவு போன்றவற்றை தெளிவாக கண்டு களித்து வருகின்றனர்.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் மாணிக்கத்தாய், மாவட்டத் தலைவர் ஜான்சன் பிரான்சிஸ், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சீத்தா, ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து மற்றும் கருத்தாளர் பரத்குமார், இவர்களுடன் இல்லம் தேடிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளஞ்சேட்சென்னி, ஊராட்சி மனறத்தலைவர் சாந்திநாராயணசாமி, ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் இராஜவேலு, ஊராட்சி செயலர் முருகானந்தம், சமூக ஆர்வலர் பம்பரம்சுத்தி க.ரெங்கநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளித் தலைமையாசிரியரும் லால்குடி அறிவியல் இயக்க பொறுப்பாளருமான திருமாவளவன் செய்திருந்தார்.

Tags

Next Story