மாவட்ட சிறுபான்மையினர் தின விழா

மாவட்ட  சிறுபான்மையினர் தின விழா

சிறுபான்மையினர் தின விழா 

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நாகப்பட்டினம் ஏஜேசி பப்ளிக் பள்ளியில் மாவட்ட அளவில் சிறுபான்மையினர் தின விழா நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுகுமார் வரவேற்றார். டிஆர்ஓ பேபி நலத்திட்ட உதவிகள் மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக நாகப்பட்டினம் மாவட்டம் திகழ்கிறது. சிறுபான்மை இன மக்களுக்களுக்கு முன்னுரிமை கொடுத்து தமிழ்நாடு முதல்வர் நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு மிதிவண்டி, கல்வி உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சிறுபான்மையினர் நலன் காக்கும் அரசாக தமிழ்நாடு செயல்படுகிறது என்றார். மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் தமிமுன் அன்சாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏஜேசி பள்ளி தாளாளர் சந்திரன் நன்றி கூறினார்.



Tags

Next Story