திருவாரூரில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

திருவாரூரில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்
X

திருவாரூரில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்
திருவாரூர் மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கலியபெருமாள், மாவட்ட ஊராட்சி செயலர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் . மேலும் இக்கூட்டத்தில் எந்த பணியாக இருந்தாலும் நிலைத்து நீடித்து என்றும் இருக்கும் வகையில் பணிகளை தேர்வு செய்து நிறைவேற்ற வலியுறுத்தினார் .30 நாட்களில் தீர்வு செய்யும் உன்னத திட்டத்தை அறிவித்து செயல்படுத்திய முதலமைச்சருக்கு மாவட்ட ஊராட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story