மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் - தீர்மானங்கள் நிறைவேற்றம்

X
மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்
தி.மலையில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் குழுதலைவர் பார்வதிசீனுவாசன் தலைமையில் நடைபெற்றது
திருவண்ணாமலை காந்திநகரிலுள்ள ஒரு தனியார் மஹாலில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குழு சீ.பார்வதிசீனுவாசன் தலைமை தாங்கினார்.துணை தலைவர் பாரதிராமஜெயம் மாவட்ட திட்டபிரிவு அலுவலக தனி அலுவலர் புருசோத்தமன் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட ஊராட்சி செயலார் ஜி.ரவிசந்திரன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் ஆட்சியரின் ஆணைப்படி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளில் நடந்தசாதனைகள் குறித்து ஒளிபட தொகுப்பு ஏஆர்ஆர் மீடியா நிறுவனத்தின் மூலம் தயார் செய்யப்பட்டதற்கான ரூ.2.34 லட்சம் மாநில நிதிக்குழு மானிய தொகையிலிருந்து வழங்க அனுமதிப்பதென்றும் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 2022-23ஆம் ஆண்டு மாநில நிதிக்குழு மானிய நிதி மூலமாக ரூ.5லட்சம் சாலையனூர் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிர்வாக அனுமதியை நிர்வாக காரணத்தால் ரத்து செய்து நார்த்தாம்பூண்டி ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.5லட்சம் மதிப்பீட்டில் 2023-24ஆம் ஆண்டு மாநில நிதிக்குழு மானிய நிதி மூலமாக பணியாற்ற நிழற்குடைஅமைக்கும் பணிக்கு மன்ற ஒப்புதல் வழங்குவது மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து ஆகஸ்டு முதல் செப்டம்பர் மாதம் வரை நிர்வாக செலவினங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு தொகைகள் வழங்கப்பட்டமைக்கு நிர்வாக அனுமதி வழங்குவது என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் இல.சரவணன் ஞானசௌந்தரிமாரிமுத்து, சகாதேவன் முருகேசன் அரவிந்தன் சுஜாதா சாந்தி கண்ணன் அகிலாகுமரேசன் திலகவதி ஜெயபால் உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
