சிறை தண்டனை கைதியை குற்றவாளி என மாவட்ட காவல்துறை அறிவிப்பு
சிறை தண்டனை கைதி
நீதிமன்றத்தில் ஆஜராகி தப்பி ஓடிய சிறை தண்டனை கைதி தேடப்படும் குற்றவாளியாக மாவட்ட காவல்துறை அறிவிப்பு.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அடித்து தாக்கிய வழக்கில் கடந்த மாதம் 30 ஆம் தேதி தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கம்பம் அருகே கூடலூர் பகுதியில் மற்றொரு வழக்கிற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற கைதி விஜயகுமாரை, தேனி ஆயுதப்படை காவலர்கள் இருவர் நேற்று மதுரை மத்திய சிறையில் இருந்து காலை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். பிற்பகலில் வழக்கு விசாரணை முடிவுற்ற பின்பு கைதி விஜயகுமாரை மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்து வந்து கைதி மற்றும் காவலர்கள் டீ குடித்துக் கொண்டிருந்த போது, காவலர்களை தள்ளிவிட்டு தப்பி காட்டுப்பகுதியில் ஓடி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒளிந்து கொண்டார். இந்நிலையில் தேனி மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் அடிப்படையில் ஒரு ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருடன் 10 காவலர்கள் என, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு நேற்று மாலை முதல் பெரியகுளம் பகுதியான அகமலை சொர்க்கம் வணப்பகுதி மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தப்பி ஓடிய சிறை கைதியை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் தப்பி ஓடிய சிறை கைதி விஜயகுமாரை தேடப்படும் குற்றவாளி என அறிவித்து. குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டதோடு தப்பி ஓடிய கைதியை கண்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்ணும் வெளியிட்டுள்ளனர்.
Next Story