சிறுவாபுரி கோவிலில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஆய்வு !

சிறுவாபுரி கோவிலில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஆய்வு !

 வருவாய் அலுவலர்  ஆய்வு

சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.
சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு செய்தார். சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு. அண்மையில் பெண் ஒருவர் தீக்காயமடைந்த நிலையில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே சின்னம்பேடு சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமிகோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6.வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கோவிலில் பக்தர்களுக்காக அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். கடந்த வாரம் சிறுவாபுரி முருகன் கோவில் பெண் பக்தர் ஒருவர் வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக ஆலயத்தில் நெய் தீபம் ஏற்றுக் கொண்டிருந்தபோது திடீரென சேலையில் தீப்பிடித்தது அவர் தீக்காயமடைந்த நிலையில் அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பக்தர்களுக்காக பாதுகாப்பு அம்சங்கள், வரிசையில் செல்வதற்கான ஏற்பாடு குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டறிந்து ஆலயத்தில் பல்வேறு பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பக்தர்கள் தெரிவிக்கையில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மட்டுமல்லாது ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் சமீப காலத்திலிருந்து பக்தர்கள் நாங்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்றி செல்வதாகவும், இத்தகைய பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் ஏதுவாக தரிசனம் செய்ய போதிய இட வசதியும் அடிப்படை வசதிகளும் சரிவரவில்லை என்றும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூடுதல் மண்டபங்கள் அமைக்க வேண்டும் விழா நாட்களில் கோவிலுக்கு அதிகமாக பக்தர்கள் வருவதால் சாலையில் நின்று மணி கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இது மட்டுமின்றி பக்தர்கள் வரும் வாகனங்கள் சாலையில் செல்ல மிகக் கடினமாக இருப்பதாக நடைபாத வியாபாரிகள் சாலையின் இரு புறமும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்து இருப்பதால் நடப்பதற்கே வழியின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலைத்துறையானது பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதோடு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Tags

Next Story