திருத்தணியில் பட்டாசு கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

திருத்தணியில் பட்டாசு கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு


தீபாவளி பண்டிகை ஒட்டி திருத்தணி நகரில், 5 கடைகள் வைப்பதற்கு உரிமம் கேட்டு ஆர்.டி.ஓ.,விடம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஆர்.டி.ஓ., தீபா, தாசில்தார் மதன் மற்றும் வருவாய் ஆய்வாளர் கமல், தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் திருத்தணி என்.எஸ்.சி. போஸ் ரோடு பகுதியில் உள்ள மூன்று பட்டாசு கடைகள், கந்தப்பன் தெரு மற்றும் அரக்கோணம் சாலை ஆகிய இடங்களில் மொத்தம், 5 பட்டாசுகளுக்கு நேரி்ல் சென்று ஆய்வு செய்தனர். மேலும் பட்டாசுகள் பாதுகாப்பாக வைப்பதற்கு போதிய வசதிகள் உள்ளதா, விற்பனை செய்யும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் கடைக்காரர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story