கிள்ளியூர்  பகுதியில்  கடன்  உதவி  மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

கிள்ளியூர்  பகுதியில்  கடன்  உதவி  மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
X

கிள்ளியூர்  பகுதியில்  கடன் உதவி  மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்

அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில், கிள்ளியூர் வருவாய் வட்டத்திற்குட்பட்ட துண்டத்துவிளை புனித அந்தோணியார் சமுதாய நலக்கூடத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பாலசுப்பிரமணியம் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த முகாமில் 11 பயனாளிகளுக்கு பட்டா நிலத்திற்கு உட்பிரிவு பட்டா பெறுவதற்கான சான்றிதழ்கள், 7 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள்,

கொல்லஞ்சி ஊாட்சிக்குட்பட்ட கொல்லஞ்சி ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.96.00 இலட்சம் மதிப்பில் வங்கி நேரடி கடனும், மத்திக்கோடு ஊராட்சிக்குட்பட்ட பால்மா தக்காளி காட்டுவிளை மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.20.00 இலட்சம் மதிப்பில் வங்கி நேரடி கடன் என சுமார் ரூ.1.7 கோடி மதிப்பில் கடன் உதவியும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. முகாமில் தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்பு திட்டம்) குழந்தை சாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, கிள்ளியூர் வட்டாசியர் ராஜசேகர் உட்பட துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story