ஒன்றிய பகுதிகளில் மாவட்ட செயலாளர் வாக்கு சேகரிப்பு !

ஒன்றிய பகுதிகளில் மாவட்ட செயலாளர் வாக்கு சேகரிப்பு !

வாக்கு சேகரிப்பு

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் V. S. மாதேஸ்வரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் திமுக மாவட்ட செயலாளர் எஸ்.எம். மதுரா செந்தில் வாக்குகள் சேகரித்தார்.
திருச்செங்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட தி.கைலாசம்பாளையம், அப்பூர்பாளையம், நெய்க்காரப்பட்டி, தி.புதுப்பாளையம், கோட்டபாளையம், திருமங்கலம், வட்டூர், அப்பியாபட்டி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இந்தியா கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் V. S. மாதேஸ்வரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் திமுக மாவட்ட செயலாளர் எஸ்.எம். மதுரா செந்தில் வாக்குகள் சேகரித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் வட்டூர் தங்கவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கொமதேக மேற்கு மாவட்ட கழக செயலாளர் நதி ராஜவேல் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story