வேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் பாதுகாப்பு பணி ஆய்வு

வேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் பாதுகாப்பு பணி ஆய்வு

காவல் கண்காணிப்பாளர் ஆய்வு 

வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பணி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பணி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், நேரில் ஆய்வு

வேதாரண்யத்தில் புகழ்பெற்ற வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான தேரோட்டம் வரும் 20.02.2024 அன்று நடைபெற உள்ளது. தேரோட்ட விழாவினை பார்க்க வேதாரண்யம் சுற்று வட்டாரம் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேரோட்டம் குறித்து பாதுகாப்பு மற்றும் பல்வேறு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இன்று நேரில் ஆய்வு செய்தார்கள்,பின்பு கூட்டத்தில் வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தும் இடங்களையும், பஸ் போக்குவரத்து முக்கிய வீதிகளுக்கு இடையூறு இல்லாமல் ஆங்காங்கே நிறுத்தி திருப்பி விடுவது என பல அறிவுரைகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், மாவட்ட காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்கள்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி ஊர்க்காவல் படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல்துறையினர்,மாவட் ட ஆயுதப்படை காவல்துறையினர்,தாலுகா காவல்துறையினர் என சுமார் 400 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Tags

Next Story