காஞ்சியில் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்: அபாயம்

காஞ்சியில் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்: அபாயம்

பள்ளம் தோண்டிய இடம்

காஞ்சியில் சாலையோரம் பள்ளம் தோண்டிய இடத்தில் பாதுகாப்புக்காக தடுப்பு அமைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதியில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில், கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதியினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாநகராட்சி சார்பில், எந்த இடத்தில் குடிநீருடன், கழிவுநீர் கலக்கிறது என்பதை கண்டறிய பணாமுடீஸ்வரர் கோவில் அருகில், சாலையோரம் பள்ளம் தோண்டி உள்ளனர். பள்ளம் தோண்டிய இடத்தில் பாதுகாப்புக்காக தடுப்பு அமைக்கவில்லை.

இதனால், இரவு நேரத்தில், சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, குடிநீர் சீரமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டிய இடத்தில், விபத்து ஏற்படுவதை தவிர்க்க பாதுகாப்புக்காக தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story