நாளை முதல் மாற்றுப்பாதையில் செல்லும் ரயில்கள்

நாளை முதல் மாற்றுப்பாதையில் செல்லும் ரயில்கள்

  நாளை முதல் மாற்றுப்பாதையில் செல்லும் ரயில்கள் குறித்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. 

நாளை முதல் மாற்றுப்பாதையில் செல்லும் ரயில்கள் குறித்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புதன்கிழமை காலை 9.45 மணிக்குப் புறப்படும் குருவாயூர் விரைவு ரயில் (வண்டி எண்16127) விழுப்புரத்திலிருந்து கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்றடையும். இந்த ரயில் கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூரில் நின்று செல்லும். குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் குருவாயூர் விரைவு ரயில் (வண்டி எண் 16128) திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடையும். இந்த ரயில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு மதுரைக்குப் புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் (வ.எண் 22671) விழுப்புரத்திலிருந்து கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி வழியாக செல்லும்.

மதுரையிலிருந்து கச்சிகுடாவுக்கு புதன்கிழமை காலை 5.30 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (வ.எண் 07192) திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடையும். இந்த ரயில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். காரைக்குடியிலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு காலை 5.30 மணிக்குப் புறப்படும் பல்லவன் அதிவேக விரைவு ரயில் (12606) திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் வழியாக விழுப்புரம் வந்தடைந்து பின்னர் சென்னைக்குச் செல்லும்.

இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு காலை 6.40 மணிக்குப் புறப்படும் வைகை அதிவேக விரைவு ரயில் (வண்டி 12636) திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் வழியாக விழுப்புரம் வந்தடைந்து பின்னர் சென்னைக்குச் செல்லும். இந்த ரயில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என

Tags

Next Story