சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க கோட்ட பொறியாளர் உத்தரவு

X
சேந்தமங்கலம் அருகே சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க கோட்ட பொறியாளர் உத்தரவு
சேந்தமங்கலம் அருகே சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க கோட்ட பொறியாளர் உத்தரவு
சேந்தமங்கலம், டிச. 2 சேந்தமங்கலம் அடுத்த பழையபாளையத்தில் 4.50 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் பழையபாளையம், போடிநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, அலங்காநத்தம் பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து அதிகரித்துள்ளது, ஆகையால் சாலைகளை அகலப்படுத்தி நெடுஞ்சாலை துறையின் சார்பில் 4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2.4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் தற்போது நடக்கிறது. கோட்ட பொறியாளர் திருகுணா நேரில் பார்வையிட்டு சாலையின் விரிவாக்கப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு சாலைகளின் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும். போக்குவரத்து அதிகமாக உள்ள சாலைகளை தரமாக அமைக்க வேண்டும். சாலை விரிவாக்கப்பணிகளை ஆய்வாளர்கள், செயற்பொறியாளர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சாலை விரிவாக்கப்பணிகள் அரசு விதிகளுக்கு உட்பட்டு சாலைகளை அமைத்திட வேண்டும். மழை காலம் தொடங்கியுள்ளதால் சாலைப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வில் உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், பொறியாளர் பிரனேஷ், ஒப்பந்ததாரர் சுப்பிரமணி, அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
Tags
Next Story
