தீபாவளி: கோவை மாநகரில் 1,350 டன் குப்பைகள் அகற்றம்.
குவிந்துள்ள குப்பைகள்
கோவை:மாநகராட்சி 100 வார்டுகளில் நேற்று தீபாவளி நாளில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன.குடியிருப்புகள்,வணிக வளாகங்கள்,தெருக்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் தினமும் 100 முதல் 1200 டன் குப்பை தேங்கும்.அதனை தூய்மைப் பணியாளர்கள் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அப்புறப்படுத்துவது வழக்கம்.வீடு வீடாக சேகரிக்கும் குப்பை, பொது இடங்களில் சேகரிக்கும் குப்பைகளை குறிப்பிட்ட இடங்களில் குவித்து அதனை மக்கும் குப்பை,மக்காத குப்பை என பிரித்து வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று கொட்டபடும்.நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாளாக கோவை மாநகரில் 100 வார்டுகளில் வழக்கத்தைவிட குப்பை 250 டன் கூடுதலாக சேர்ந்தது.மாநகர் பகுதிகளில் மட்டும் மொத்தம் 1,350 டன் குப்பை சேர்ந்தது.இந்தக் குப்பைகளை இன்று காலை முதல் அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.ஒரு சில ஊழியர்கள் விடுப்பில் இருப்பதால் சில இடங்களில் குப்பைகள் அகற்றும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நாளை பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வந்து விடுவார்கள் என்பதால் நாளை அனைத்து இடங்களிலும் தேங்கியுள்ள உள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story