புனித அமல ராகினி பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் தீபாவளி

புனித அமல ராகினி பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் தீபாவளி
மாணவர்களுடன் தீபாவளி 
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் புனித அமல ராகினி பார்வை திறன் மாற்றுத்திறனாளிகள் மேல்நிலைப் பள்ளியில் தீபாவளி திருவிழாவை சென்னை அகல் பவுண்டேஷன் மற்றும் போத்தீஸ் நிறுவனம் இணைந்து மாணவர்களுடன் கொண்டாடியது. தலைமையாசிரியர் லெவேல் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி மாணவர்கள் பேண்டு வாத்தியம் முழங்க சிறப்பு அழைப்பாளர் அகல் பவுண்டேசன் நிர்வாகி அம்பிகா ராஜ், ராஜேஸ்வரி, பிரியதர்ஷினி மற்றும் நிர்வாகிகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து நான்கு வகுப்பறைகளில் புதியதாக கரும்பலகையை அகல் பவுண்டேஷன் நிர்வாகி அம்பிகா ராஜ் திறந்து வைத்தார். பார்வைத் திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.அகல் பவுண்டேஷன் மற்றும் போத்தீஸ் இணைந்து மாணவர்களுக்கு புத்தாடை இனிப்பு பட்டாசு ஆகியவற்றை வழங்கி அவர்களுடன் அமர்ந்து அறுசுவை உணவு சாப்பிட்டனர். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட் சகோதரர் லெவேல் தாளாளர் எலியாஸ் அருட் சகோதரர் பாபுமற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story