தீபாவளி பண்டிகை : 2கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை
தமிழகத்தில் சேலம், கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், உள்ளூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதேபோல் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஆடு 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை விற்பனை ஆனது.
ஆட்டு குட்டி 1000 ரூபாய் முதல் விற்பனையானது. ஆடுகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கினர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று ஒரே நாளில் மட்டும் இரண்டு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. வழக்கமாக நாமக்கல் ஆட்டு சந்தையில் தீபாவளி, ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை நாட்களில் 3 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும்.
ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சந்தையில் ஆடுகளை வாங்க வருபவர்கள் ஆர்வம் காட்டாததால் விற்பனை குறைவாக நடைபெற்றதாக ஆடு விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.