வந்தவாசியில் தீபாவளி சீட்டு மோசடி

வந்தவாசியில் தீபாவளி சீட்டு மோசடி

நிறுவனத்தின் முன்பு குவிந்த மக்கள்


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் பகுதியில் வி.ஆர்.எஸ் என்ற தனியார் சீட்டு நிறுவனம் இயங்கி வருகின்றன. இந்த நிறவனத்தின் உரிமையாளராக வந்தவாசி பகுதியை சேர்ந்த சம்சுமொய்தீன் என்பவர் இருந்து வருகின்றார். மேலும் வந்தவாசி செய்யார் உத்திரமேரூர் ஆரணி போளுர் உள்ளிட்ட பகுதியில் ஏஜென்ட்களாக பலரை நியமித்து தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் கவர்ச்சிகரமான பொருட்கள் தருவதாக கூறி சுமார் பல கோடி ரூபாய் மோசடி ஈடுபட்டு தலைமறைவாகிவிட்டார்.

மேலும் பாதிக்கபட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை பொருளாதார குற்றவியல் பிரிவில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர் தீபாவளி புகாரின் பேரில் பொருளாதார குற்றபிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான வி.ஆர்.எஸ் தனியார் சீட்டு நிறுவனர் சம்சு மொய்தினை கைது செய்தனர்.

மேலும் பாதிக்கபட்ட பொதுமக்கள் தங்களின் பணத்தை மீட்டு கொடுக்க கோரி பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு கையேந்தி பிச்சை எடுத்தும் வயிற்றில் வாயில் அடித்து கொண்டு நூதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு தொடர் போராட்டமாக நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்களை ஏமாற்றிய சம்சு மொய்தீன் என்பவரின் நிறுவத்திற்கு சீல் வைத்து அவருடைய பெயரில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றன.

தீபாவளி பொங்கல் பண்டிகையை பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களிடம் கவர்ச்சி திட்டம் அறிவித்து இதே போல பல நிறுவனம் மோசடி ஈடுபட்டு வருகின்றன. இதனை ஓடுக்க போலீசார் முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும் இதே போன்று நிறுவனங்கள் நிறுவபடும் போது அதனை கண்காணித்து பொதுமக்களுக்கு வாழ்வதாரம் பாதிப்பு ஏற்படாமல் போலீசார் துரித நடவக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கபட்ட பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story