முன்னாள் மக்களவை உறுப்பினா் டி.கே.ரங்கராஜன் பிரச்சாரம்...

முன்னாள் மக்களவை உறுப்பினா் டி.கே.ரங்கராஜன்  பிரச்சாரம்...

திமுக

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிடும் ரா.சச்சிதானந்தத்தை ஆதரித்து, அந்தக் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினா் டிகே.ரங்கராஜன் பரப்புரை மேற்கொண்டாா்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிடும் ரா.சச்சிதானந்தத்தை ஆதரித்து, அந்தக் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினா் டிகே.ரங்கராஜன் புதன்கிழமை பரப்புரை மேற்கொண்டாா். திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: இந்தியாவைப் பொருத்தவரை ஜனநாயகத்தைப் பாதுக்காக்க வேண்டிய அவசியத்தோடு மக்களவைத் தேர்தலை எதிா் கொண்டிருக்கிறோம். ஆா்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் திரிபுதான் பாஜக. 370-ஆவது சட்டப் பிரிவை நீக்க காஷ்மீரை பிரித்த பாஜக, நாளை தமிழகத்திலும் பிரிவிணையை ஏற்படுத்தாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. எனவே தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

Tags

Read MoreRead Less
Next Story